திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பழைய பேட்டையில் சம்பு (45). என்பவரும், அவருக்கு அருகில் மணிகண்டன் என்பவரும் (35). வியாபாரம் செய்து வருகின்றனர். (11.01.2024) அன்று, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இருவரும் கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சம்பு உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்