மதுரை: 2009 முதல் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பயணியை மதிசியம் போலீசார் கைது செய்தனர். 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி துபாய் விமானத்தில் மதுரை வந்தபோது கைது செய்யப்பட்டார். மதுரை விமான நிலையத்திற்கு துபையில் இருந்து பயணிகள் விமானம் பிற்பகல் 11.45 மணிக்கு மதுரை வந்தது. அதில் வந்த பயணிகளின் விபரங்களை விமானநிலைய சுங்க இலாக மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில், மதுரை ஆத்தி குளம், மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் மணிசங்கர் என்ற பயணியிடம், அவரது கடவுச்சீட்டை குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர் மீது மதுரை மதிச்சியம் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று கடந்த 2009 ஆம் ஆண்டு நிலுவையில் இருப்பதாகவும், அவர் தேடப்பட்டு தலைமறைவாகி வருவதாகவும் தகவல் இருந்தது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, விமான நிலையத்திற்கு வந்த மதுரை மதிச்சியம் சிறப்பு சார்பு ஆய்வாளர் வெள்ளியணை மற்றும் போலீசார் மணிசங்கரை கைது செய்தனர். மதுரை விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த நபரை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி