திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான திருநெல்வேலி பாபநாசம் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.அஜித் குமார், தலைமைக் காவலர் திரு.வேல்முருகன், மற்றும் சமூக ஆர்வலர் நைனா முகமது ஆகியோர் ஒன்றிணைந்து விபத்து ஏற்படுவதை தடுக்கும் வண்ணம் சாலையில் உள்ள குழிகளை மணல் மற்றும் கற்களை கொண்டு சமன் செய்து விபத்து ஏற்படுபடாமல் தடுக்க வழிவகை செய்தனர்.
இந்நற்செயலை கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்கள்.