அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் ராம்கோ சிமெண்ட் ஆலை நிறுவனம் சார்பில், மாவட்ட காவல் துறைக்கு இரும்பு தடுப்பு அரண்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ராம்கோ சிமெண்ட் ஆலை நிறுவன அலுவலர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடுப்பு அரண்களை காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, விபத்து அபாயம் அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த இரும்பு தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, வாகன விபத்துகளைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். மேலும், சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கிய ராம்கோ சிமெண்ட் ஆலை நிறுவனத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது காவல் துறை அதிகாரிகள் மற்றும் ராம்கோ நிறுவன பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
















