திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிச்சைமணி இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த போது வாகன விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் வங்கி கணக்கு (Police Salary Pakage) உடன் இணைக்கப்பட்டுள்ளதால் SBI வங்கி சார்பாக விபத்து காப்பீட்டுத் தொகையாக ரூ.30,00,000 ற்கான காசோலையை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலையில் உயிரிழந்த பிச்சைமணியின் குடும்பத்தினரிடம் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா