திருப்பத்தூர் : காவல்துறையில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இருப்பினும் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்களாகிய நீங்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க முன் வரலாம் என திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் நேற்று (13.04.2023) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுங்கச்சாவடி பகுதியில் (நெக்குந்தி கிராமம்) சென்னை To பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்தை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்கள் நேரில் ஆய்வு செய்து விபத்துக்களை தவிர்ப்பதற்காக பொதுமக்களிடமும் இளைஞர்களிடமும் விபத்து சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதில் தேசிய நெடுஞ்சாலை மேலாளர் மற்றும் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் உடன் இருந்தனர்.