திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் மாடுகளை வைத்து தொழில் நடத்தி வருகின்றனர். இவர்கள் மேய்ச்சலுக்காக மாடுகளை கொண்டு செல்லும்போது மாடுகள் இரவு நேரங்களில் சாலையை கடக்கிறது. இதனால் இருசக்கர வாகனம் ஓட்டுவோர், நான்கு சக்கர வாகனம் ஓட்டுவோர் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
மேற்படி உயிரிழப்பை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரையின் படி வள்ளியூர் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் திரு.சுனைமுருகன் அவர்கள் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள கிராமங்களில் மாடுகளை வைத்திருக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மாட்டுக் கொம்புகளில் Reflecting Sticker களை ஓட்டியும் இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் Reflecting sticker இருப்பதனை அறிந்து கவனமுடன் பயணம் செய்வார்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.