திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் அருண்பிரகாஷ் (29). இவர் மணிமுத்தாறு 9-ஆவது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் (13.10.2025) அன்று முன்னீர்பள்ளம் அடுத்த பிராஞ்சேரி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்