திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பழவேற்காடு கடலில் இன்று கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக மீஞ்சூர் பஜார் வீதியில் அணிவகுத்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை, சமூக நல்லிணக்கத்தோடு அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். இதில் மீஞ்சூர் அணைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் M.வேலுமணி அவர்களும் விழா குழுவினரோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒவ்வொரு வருடமும் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து விநாயகர் ஊர்வலத்தை வரவேற்பது குறிப்பிடத்தகக்கது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு