திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினருடன் ஆலோசனை நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, சிவசேனா தமிழகம், இந்து தமிழர் கட்சி, இந்து தர்ம சக்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது. உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தினார்.இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மகேஷ்,தெய்வம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.