அரியலூர்: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் சாஸ்திரி இ.கா.ப அவர்கள் தலைமையில் விழா ஏற்பாட்டாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு முத்துதமிழ்ச்செல்வன் அவர்கள் அரியலூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ரகுபதி அவர்கள் மற்றும் செயங்கொண்டம் உட்கொட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ரவிசக்கரவர்த்தி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் மற்றும் விதிமுறைகளையும் விநாயகர் சிலை வைக்கும் அமைப்பினர் விழா ஏற்பாட்டாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன.