திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் கடந்த சில நாட்களாக நகர் முழுவதும் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் கோவிந்தாபுரம், ரவுண்டுரோடு, நாகல்நகர், பாரதிபுரம், ரதவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் அலுவலர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆய்வில் ஈடுபட்டனர். அதில் பல்வேறு இடங்களில் விதியை மீறி அனுமதித்த அளவை விட கூடுதலாக கட்டிடம் கட்டியதை அலுவலர்கள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 41 கட்டிட உரிமையாளர்கள் மீது நகரமைப்பு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா