நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் மோட்டார் விதிகளை மீறுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிக்கப்படும் அபராத தொகையானது பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அட்டவணையானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அட்டவணையில் எந்த பிரிவின் கீழ் எவ்வளவு தொகை என்பது குறித்து வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாங்கள் எந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் எவ்வளவு அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்பது குறித்தும் இந்த அட்டவணையை பார்த்து தாங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
மேலும் இந்த அட்டவணையானது வாகன தணிக்கை செய்யும் இடங்கள், சோதனைச்சாவடி போன்ற அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும். மோட்டார் வாகன சட்ட விதிகள் படி தங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யும்போது உங்களின் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். Echelon machine மூலமாக என்ன குற்றத்தின் கீழ் எவ்வளவு அபராதத் தொகை பதிவிடப்படுகிறது என்பதை உங்களுக்கு கொடுக்கப்படும் செலான் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குடிபோதையில் வாகனம் ஓட்டி வரும் நபர்கள் நீதிமன்றம் மூலமாக மட்டுமே அபராத தொகையை செலுத்த இயலும். மற்ற பிரிவின் கீழ் குற்றம் புரியும் நபர்கள் Swipe machine மூலம் செலுத்தப்படும் தொகை மற்றும் இணையதளம் வழியாக செலுத்தும் அபராதத் தொகை என இரண்டு வழிகளில் அபராத தொகையானது செலுத்தப்படுகிறது. இந்த அட்டவணை வெளியிடுவதன் மூலம் காவல்துறையினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு காவல்துறையினர் மீது தவறான எண்ணம் ஏற்படாது. மேலும் தங்களுக்கு இது தொடர்பான குறைகள் ஏதாவது இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறினார்கள்.