குமரி: குமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற
வாகனங்களால் விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் அவர்கள் வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் தலைகவசம், உரிய ஆவனங்கள் இன்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.