திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலையம் அயன் திருவாளிஸ்வரத்தை சேர்ந்த துளசிநாதன், என்பவர் மனைவியை அடித்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
மேற்படி குற்றவாளிக்கு இன்று அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வாய்தா இருந்ததால் காவலர்கள் கைதி வழி காவலாக அம்பாசமுத்திரம் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். நீதிமன்றத்திற்கு உள்ளே சென்றதும் துளசிநாதன், திடீரென்று காவலர்களை தட்டிவிட்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச் சென்ற போது காவலர்கள் சத்தம் போட்டுள்ளனர்.
அப்போது பாப்பாகுடி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் திரு.விவேக், அவர்கள் விடுப்பில் இருந்து வருவதால் சம்பவ நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று சத்தம் கேட்கவும் சுதாரித்துக்கொண்ட திரு.விவேக், தப்பிச்சென்ற துளசிநாதனை விரட்டி மடக்கிப்பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர் துளசி நாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப அவர்கள், தலைமைக் காவலர் திரு.விவேக், அவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.
விடுப்பிலும் தன் கடமையை உணர்ந்து காவல் பணி செய்த காவலரை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பொதுமக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.