நெல்லை: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பாங்குளம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் சுதாகர்(35).இவரது மனைவி மணிமேகலை.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் வேல் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இவர்கள் இருவரும் 4-ஆண்டுகளுக்கு முன்பு மும்பை சென்று தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.இந்த நிலையில் சமீபத்தில் தெற்கு பாப்பாங்குளத்திற்கு வேல் வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வேல் அயன்சிங்கம்பட்டியில் உள்ள தனது சகோதரி சித்ரா வீட்டுக்கு சென்று உள்ளார்.
பின்னர் அவர் கல்லிடைக்குறிச்சி அருகே பாப்பாங்குளம் நாலுமுக்கு ரோட்டில் வந்து கொண்டிருந்த போது சுதாகர் (34), இவரது சகோதரர் சுடலைமுத்து (30) மற்றும் முருகன் மகன் இசக்கிமுத்து (22) ஆகியோர் சேர்ந்து வேலுவை வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே கொலையாளிகள் சுதாகர், சுடலைமுத்து, முருகன் ஆகிய 3 பேரும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.