திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜா(27) இவரை நேற்று இரவு ராமையன்பட்டி, கணேசபுரத்தில் சவரியம்மாள் என்பவர் வீட்டில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர்கள் சித்திக், கிருஷ்ணவேணி, அங்கமுத்து மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட R.V. நகரை சேர்ந்த உதயா(19). முருகபவனத்தை சேர்ந்த பாண்டியராஜன்(19). நெட்டுதெருவை சேர்ந்த விமல்(19). R.V.நகரை சேர்ந்த ஹரிஷ்ராகவேந்திரன்(20). ஆகிய 4 பேர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















