திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த செட்டியபட்டி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹக்மா ராம் என்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீஸ் எஸ்.ஐ அருணோதயம்,எஸ்.பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















