நெல்லை: நெல்லை அருகே சீவலப்பேரி, பகுதியை சேர்ந்த சுரேஷ் 36. இவர் போக்சோ வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் திரு.வே.விஷ்ணுவிற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி,நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ரசிதா நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் சுரேஷை கைது செய்து,பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.