புதுக்கோட்டை: சவுக்கப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா என்கிற வினோத் ( 25). இவர் கோவை பன்னிமடையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி பண்ணி மடை கடைவீதி பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த 71 வயது மூதாட்டியை கொன்று நகையை திருடிச்சென்றார்.
மேலும் மூதாட்டி பிணமான நிலையிலும் பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். இதுகுறித்து தடாகம் போலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.