நெல்லை: நெல்லை;பாளையங்கோட்டை அருகே உள்ள மேலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் 20.இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண ஆசை காட்டி,அந்த சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் பாளையங்கோட்டை தாலுகா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவுசெய்து அபிஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.