திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு முள்ளிப்பாடி அருகே சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு சிலர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியாக திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தில் விழுந்து அடையாளம் தெரியாத வாலிபர் படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் காரில் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா போலீசார் அடையாளம் தெரியாத நபரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்புஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் விபத்தா? கொலையா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா