திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியின் கணவரைக் கொன்று ஜாமினில் வெளிவந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர் மைதீன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் வசந்த் என்பவரை கொலை செய்த தாடிக்கொம்புவை சேர்ந்த குமரேசன் மற்றும் திண்டுக்கல், அடியனூத்து, தாடிக்கொம்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா