திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த பால் கறக்கும் தொழிலாளி ராமச்சந்திரன்(24). இவர் விருவீடு அருகே கணபதிபட்டியில் வசிக்கும் சந்திரன் மகள் ஆர்த்தி(21). என்பவரை instagram மூலம் பழகி திருமணம் செய்து கொண்டார். இருவரும் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி நிலக்கோட்டையை அடுத்த கூட்டாத்து பாலம் அருகே ராமச்சந்திரன் வெட்டி படுகொலை செய்தனர்.இது தொடர்பாக மாமனார் சந்திரன், மனைவி மற்றும் மகன் நிவின் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவர்களின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும்போது திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் அவர்கள், சந்திரன் மற்றும் நிவின் ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து நிலக்கோட்டை போலீசார் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















