திண்டுக்கல்: திண்டுக்கல், தோமையார்புரம் அருகே முட்புதரில் நேற்று சின்னாளப்பட்டி சேர்ந்த பாலமுருகன்(39). என்பவரை கை, கால்கள் கட்டப்பட்டு கண்கள் துணியால் மூடப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP. சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் அருண்நாராயணன், பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் மேற்படி சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஜஸ்டின்ராஜா(35). பன்னீர்செல்வம்(30). லியோசார்லஸ்(28). முத்துக்குமார்(49). கார்த்திக்ராஜா(46). திருப்பதி(35).விக்னேஷ்(32). ஆகிய 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், டூ வீலர் மற்றும் கார் ஆகியவற்றை தனிப்படையினர் பறிமுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா