திருச்சி : வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (23.07.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும், பெறப்பட்ட மனுக்கள் மீது துரிதமாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.