திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் செக்கனோடை வாய்க்காலில் பெண் சடலம் ஒன்று மிதந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் மடத்துக்குளம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர். தகவலை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் வாய்க்காலில் அழுகிய நிலையில் இருந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் உடல் அடையாளம் காண முடியாத அளவு முகம் மற்றும் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருப்பதால் இறந்தவர் யார் என்பது தெரியவில்லை என போலீசார் கூறியுள்ளனர். மேலும் இந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை யாராவது கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசிப்பட்டாரா என்ற பல்வேறு கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்தும் மடத்துக்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















