மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சமயநல்லூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ஆனந்தராஜ் அவர்களின் மேற்பார்வையில், வாடிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு. கணேசன் அவர்களின் உத்தரவின் பேரில், நேற்று (07.01.2026)-ம் தேதி மதியம் மதுரை to திண்டுக்கல் ரோடு வாடிப்பட்டி மின்சார அலுவலகம் அருகே வாடிப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பழனி தலைமையில் தலைமைக்காவலர் 1335 திரு.உக்கிரபாண்டி, தலைமைக்காவலர் 2199 திரு.நாகராஜன், ஆகியோர்களுடன் சம்பவ இடம் சென்று பார்த்த போது அவ்விடத்தில் பேக்குடன் நின்று கொண்டிருந்த ஒரு நபர் போலிஸ் பார்டியை கண்டதும் ஒட எத்தனித்தவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரிக்க தனது பெயர் மணிக்குயில் வயது (28/26). த/பெ மகாலிங்கம், மீனாட்சி விலாஸ் எஸ்டேட், மேப்பாடி, வெள்ளரிமாலா, வயநாடு, கேரளா என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவரிடமிருந்து 6 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் மேற்படி எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்களுக்கு உயரதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தார்கள். இனி வரும் காலங்களில் இது போன்று வெளி மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள். இது போன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 91760-79100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















