மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றத்திறனாளி கள் மறுவாழ்வு இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மதுரை திரிவேணி பள்ளி சார்பாக புத்தாடைகள் போர்வைகள் அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைப்பாளர் சுமிதா சார்லஸ் தலைமை தாங்கி மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார். தலைமை போதகர் ஷாம்பால் முன்னிலை வகித்தார். இல்ல செயலாளர் ஆசைத்தம்பி வரவேற்றார். இதில், ஆசிரியர்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில், இல்ல காப்பாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















