தேனி : கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் காரணமாக தமிழக அரசால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய பொறுப்பு அதிகாரிகள் தலைமையிலான காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து, முக்ககவசம் அணிந்து, அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்றும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளுக்கு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.