கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதியாக, மஞ்சக்கொள்ளை கிராமத்தில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் நாளில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள தேவையான வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தினார். மேலும், பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
















