திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
















