தேனி: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சமூக இடைவெளியை பின்பற்றி வாகன தணிக்கை மற்றும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்த்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும், மீறி வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வு கழற்ற பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போடி பகுதியில் காலையில் சிலர் சாலைகளில் சென்று வந்தனர். இவர்களை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இருந்தபோதிலும் போடி பழைய பேருந்து நிறுத்தம், எஸ் எஸ் புரம், திருமலாபுரம், சுப்புராஜ் நகர், வஞ்சி ஓடை தெரு, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இன்றியும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
போடி சாலை, காளியப்பன் கோவில்,ரெங்கநாதபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த காவல்துறை கொரோனா தடுப்பு சோதனை சாவடிகளில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
இ-பதிவு பெறாத வாகனங்களை திருப்பி அனுப்புகின்றனர் தேவையின்றி வந்த வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
போடி பகுதியில் முக்கிய சாலைகள் ஆன பெரியாண்டவர் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை ஆகிய சாலைகளில் பழைய பேருந்து நிறுத்தம் தேவர் சிலை ஆகிய இடங்களில் போலீசார் போக்குவரத்தை தடை செய்து தடுப்புகளை அமைத்துள்ளனர்.