தூத்துக்குடி: இன்று முதல் தமிழகத்தில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
. தேனீர் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வாகன தணிக்கையை கடுமையாகவும் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், சமூக இடைவெளி இன்றி இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் தமிழகத்தில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேனீர் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வாகன தணிக்கையை கடுமையாகவும் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், சமூக இடைவெளி இன்றி இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை எச்சரிக்கும் பொருட்டு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்புகள் ஒலிபரப்பு செய்தனர். பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதை தடுபபதற்காக போலீசார் ரோந்து வாகனங்களிலும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.