தருமபுரி : தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை அடுத்து காவல் ஆய்வாளர் திரு.வெங்கட்ராமன் அவர்கள் தலைமையிலான உதவி ஆய்வாளர் திரு. ஜவகர் மற்றும் காரிமங்கலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்
















