திருச்சி : திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்றை சோதனை செய்ததில் காரில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 75 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதைப்பொருட்கள் (குட்கா) கைப்பற்றப்பட்டது. மேலும், காரை ஓட்டி வந்த சிவாஜி ராஜா என்பவரை கொள்ளிடம் காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
















