திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . அதன்படி, (15.12.2025) காலை சமாதானபுரம் அருகே பாளையங்கோட்டை காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவரை தடுத்து நிறுத்த முயன்ற போது அந்த நபர் பைக்கை நிறுத்தாமல் பணியில் இருந்த தலைமைக் காவலர் பொன்மகேஷ்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதில் காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, தப்பிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















