திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, சீவலப்பேரி சாலை கக்கன் நகர் நான்கு வழிச்சாலை அருகே (02.02.2025) – அன்று, பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், கோமதி சங்கர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த அருண்குமார் (27). வள்ளித்துரை (25). பீர் மைதீன் (34). வினோத் (30). ஆகியோரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 120 கிராம் கஞ்சாவையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நால்வரையும் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்