திருநெல்வேலி : திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரகுமார் தலைமையிலான காவல்துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரை கண்டதும் பின்னால் வைத்திருந்த பெட்டியை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்பெட்டியை சோதனை செய்ததில் அதில் 21 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பதை அறிந்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்