திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ஏட்டு செந்தில்குமார், ஆகியோர் தாடிக்கொம்பு அடுத்த காப்பிளியபட்டி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விராலிப்பட்டி பகுதியில் இருந்து திண்டுக்கல் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது. போலீசார் நிற்பதை பார்த்த டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடினார். அதை பார்த்த போலீசார் லாரியை சோதனை செய்ததில் அதில் திருட்டுத்தனமாக மணல் கடத்தியது தெரியவந்தது. இதை அடுத்து டிப்பர் லாரியை போலீசார் கைப்பற்றி தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் கொண்டு வந்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.