தூத்துக்குடி: எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. உமா மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா மற்றும் தனிப்படை போலீசார் (29.03.2026) எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழபுரம் to சிவஞானபுரம் சாலை விலக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை செய்ததில், அவர்கள் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர்களான நம்பிராஜ் (28). மற்றும் ஜெகதீஷ் (35). ஆகியோர் என்பதும், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான நம்பிராஜ் மற்றும் ஜெகதீஷை கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















