திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம்பகுதியில் காவல்துறையினர் (10.05.2025) அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் அரிவாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அவர் நாகம்மாள்புரத்தைச் சேர்ந்த முருகன் மகன் அம்மு வெங்கடேஷ் (25). என்பதும், இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அம்மு
வெங்கடேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்