அரியலூர்:  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K .பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் உத்தரவின்படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அரியலூர் நகரில் தேரடி பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
விதி மீறல்களை தடுக்கும் பொருட்டும், உயிர்களை காக்கும் பொருட்டும் அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் போக்குவரத்து விதிகளை முறையை பின்பற்றி, அபராதம் தவிர்த்து பாதுகாப்பாக பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
                                











			
		    


