திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறையின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விபத்துகள் நிகழும் பகுதிகளில், சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து, காவல்துறையினர் கூட்டு ஆய்வு மேற்கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தன்னால் இயல்பாக வாகனத்தை ஓட்ட இயலாது என்பதை அறிந்தும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துவோர், சாலை விதிகளை மீறுபவர்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் அதிகபட்சம் 10 ஆண்டுகள், காயம் ஏற்படுத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள், சாலை விதிகளை மதித்து பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்