உசிலம்பட்டியில் போக்குவரத்து காவல்துறையினர், தனியார் அமைப்பு இணைந்து தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர். சாலை விபத்துகளை தடுக்கவும், வாகன ஓட்டிகள் விழிப்புணர்வோடு வாகனங்களை இயக்க வலியுறுத்தி பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை சார்பில் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி போக்குவரத்து காவல்துறை, சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து,
இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்தினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி