திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர். இளங்கோவன் வாகன பர்மிட் லைசென்ஸ் பதிவு எண் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கு புரோக்கர் வைத்து பணம் பெற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இதனையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர். நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட போது வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வாகன புகை பரிசோதனை மையத்தில் உச்சப்பட்டியை சேர்ந்த பாண்டியராஜ்(34). சிலுக்குவார் பட்டி சேர்ந்த அஜய்ஜான்சன்(25). ஆகிய 2 புரோக்கர்களை வைத்து லஞ்சம் வாங்கியதாக கணக்கில் வராத ரூ.1,12,220 ரொக்கம், அரசு ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றி, இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர். இளங்கோவனிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















