கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் பெரிய சப்படி கிராமத்தில் உள்ள PR Mines கல்குவாரியில் முனிராஜ் என்பவர் HITACHI வாகன இயக்கும் பணி செய்து வருகிறார். மேற்கண்ட HITACHI வாகனத்தின் உதிரி பாகங்கள் பழுதாகி இருந்த நிலையில் புதிதாக கடந்த (17.02.2025) ஆம் தேதி சுமார் ₹2,15,000/- ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வாங்கி வைத்திருந்த நிலையில் (24.02.2025) ஆம் தேதி காலை 08.00மணிக்கு சென்று பார்த்தபோது வாகனத்தின் உதிரி பாகங்கள் திருடி சென்று விட்டதாக வாகனத்தின் உதிரி பாகங்களை கண்டுபிடித்து தருமாறு முனிராஜ் சூளகிரி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து HITACHI வாகனத்தின் உதிரி பாகங்கள் திருடிய இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து உதிரி பாகங்கள் பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்