திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில், இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில், நகர் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மனோகரன், நகர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ், காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி ஆகியோர் உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து இருசக்கர வாகனத்தில் திருட்டில் ஈடுபட்ட ஹக்கீம்சேட், அப்துல்ரகுமான்(47) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















