தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அண்ணாபஸ் நிலையம், மார்க்கெட் சாலை, தெற்கு பஜார் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் மக்கள் நடமாட்டத்தினை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கு, இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம்,
கூடுதல் பஸ் நிலையம் அருகே இளையரசனேந்தல் சாலை ஆகிய பகுதியில் போலீசார் வாகன சோதனை சாவடி அமைத்து வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
இ.பதிவு இருந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இ.பதிவு செய்யமால் வந்தவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். கோவில்பட்டி நகர் பகுதியில் முக்கிய இடங்களில் போலீசார் ஆங்கங்கே நின்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் 10 சதவீத மக்களின் நடமாட்டம் காணப்பட்டதால் டி.எஸ்.பி.கலைக்கதிரவன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தேவையில்லமால் சுற்றிதிரிந்தவர்களை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பலரும் மெடிக்கல், கல்யாணம், மருத்துவனையில் சிகிச்சை பெற்ற வருபருக்கு உதவியாக இருப்பதாக பல்வேறு காரணங்களை கூறிச்சென்றனர். அவர்கள் டி.எஸ்.பி. கலைக்கதிரவன் விசாரணை நடத்தினர்.
தேவையில்லமால் சுற்றியவர்களை கண்டறிந்து கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தார். தொடர்ந்து வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது மட்டுமின்றி வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.