மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பாரதி நகரில் (22.04.2024) ம் தேதி இரவு கான்முகமது என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஆறு நபர்கள் சுதந்திர நகர் முதல் தெருவில் வழி மறித்து தாக்கியது தொடர்பாக ஒத்தக்கடை காவல் நிலைய குற்ற : 134/24 U/s 147, 427, 341, 294(b), 323, 324, 307, 506 (II) IPC शुक क (23.04.2024)-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான 1) ஆகாஷ் (எ) சும்பல் (19/2024), த/பெ. முருகன், சுதந்திராநகர் 3வது தெரு, மதுரை மாவட்டம் மற்றும் 2) செல்வகுமார் (எ) கமுதி செல்வா (19/2024), த/பெ. மணிகண்டன், சுதந்திராநகர் 3வது தெரு, மதுரை மாவட்டம் ஆகியோர்கள் (24.04.2024)- தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமைக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை கடந்த (23.04.2024)-ம் தேதி சமூக வலைதளங்களில் “தலைக்கேரிய கஞ்சா போதை… சாலையில் சென்று கொண்டுயிருந்தவர் மீது சரமாரி தாக்குதல்” என்னும் தலைப்பில் CCTV வீடியோ பகிரப்பட்டு உள்ளது. மேற்படி, வீடியோவில் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் இருசக்கர வாகனத்தில் வரும் நபரை வழிமறித்து தாக்குவது போல் உள்ளது. ஆனால் வழக்கின் புலன் விசாரணையில் குற்றவாளிகள் ஒத்தக்கடையில் உள்ள தனியார் மதுபான கடையில் மது வாங்கி, அளவுக்கு அதிகமாக மது அருந்தியதன் விளைவாக, ஏற்பட்ட அதீத மது போதையின் காரணமாக மேற்படி சம்பவமானது நடைபெற்றதாக தெரியவருகிறது. மேலும், கஞ்சா போதையால் மேற்படி சம்பவம் நடைபெறவில்லை.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்